ஷரீஆவின் பார்வையில் புகைத்தலும் சிகரெட் வியாபாரமும் கேள்வி : புகைத்தல் ( Smoking ) பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? சிகரெட் வியாபாரம் செய்வது கூடுமா? ஃபத்வா: புகைத்தல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. பல வகையான தீங்குகளை அது தன்னகத்தே கொண்டிருப்பதே இதற்குக் காரணம். நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு நல்லவற்றை ஆகுமாக்கி தீங்கு விளைவிக்கக் கூடியவற்றைத் தடுத்துள்ளான். '(நபியே! உண்பதற்கும் குடிப்பதற்கும்) எது தங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது? என்று உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். சுத்தமான நல்ல பொருட்கள் உங்களுக்கு ஹலால் ஆக்கப்பட்டுள்ளது என்று நீர் கூறுவீராக!' (அல்குர்ஆன் அல்மாயிதா 5:04) '(நபி (ஸல்) எத்தகையவர் என்றால்) அவர் நன்மையைக் கொண்டு அவர்களை ஏவுவார், தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி, கெட்டவற்றை அவர்கள் மீது தடுத்து விடுவார்...' (அல்குர்ஆன், அல் அஃராப் 7:157) புகைத்தலில் எதுவுமே நல்லது கிடையா...
Posts
Showing posts from July, 2016