Posts

Showing posts from November, 2017
(அல் ஹதீஸ் (நபிமொழிகள்) அல் ஹதீஸ் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை குறிக்கும். அதாவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் செய்யும்படி கூறியவை, அன்னவர்கள் செய்தவை, அன்னவர்களின் சமூகத்தில் பிறர் செய்யும்போது அதனை அங்கீகரித்தவை ஆகியவற்றை குறிக்கும். அல் ஹதீஸ் இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களில் இரண்டாவதாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை, அல் குர்ஆனிற்கு விளக்க முறையாகவே இருந்தது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றாமல் மார்க்கத்தை முழுமையாக பின்பற்ற முடியாது. உதாரணமாக - அல் குர்ஆனில் தொழுகையானது முஸ்லிம்களுக்கு கடமையென சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொழுகை முறைகள், தொழுகையில் ஓத வேண்டிய வசனங்கள், தொளுகையினால் கிடைக்ககூடிய நன்மைகள், விட்டால் கிடைக்கும் தண்டனைகள் எல்லாம் அல் ஹதீஸிலேயே சொல்லப்பட்டுள்ளது. அல் குர்ஆனில் இவை பற்றி தனி தனியாக எதுவும் சொல்லப்பட்டு இல்லை. எனவே மார்க்கத்தை முழுமையாக கடைப்பிடிக்க நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல...